Wednesday, January 20, 2010

தாய் தின்ற மண்ணே...


திரைப்படம் : ஆயிரத்தில் ஒருவன்
வெளியான நாள் : 14.01.2010
தயாரிப்பு : R.ரவீந்திரன்
இயக்கம் : செல்வராகவன்

இசை : G.V.பிரகாஷ் குமார்
பாடலாசிரியர் : வைரமுத்து
பின்னணி : விஜய் ஜேசுதாஸ்

பாடல் வரிகள் :

தாய் தின்ற மண்ணே...
இது பிள்ளையின் கதறல்
ஒரு பேரரசன் புலம்பல்

தாய் தின்ற மண்ணே
தாய் தின்ற மண்ணே
பிள்ளையின் கதறல்
பிள்ளையின் கதறல்
ஒரு பேரரசன் புலம்பல்
ஒரு பேரரசன் புலம்பல்

நெல்லாடிய நிலமெங்கே
சொல்லாடிய அவையெங்கே
வில்லாடிய களமெங்கே
கல்லாடிய சிலையெங்கே
தாய் தின்ற மண்ணே
தாய் தின்ற மண்ணே

கயல் விளையாடும் வயல் வெளி தேடி
காய்ந்து கழிந்தன கண்கள்
காவிரி மலரின் கடிமணம் தேடி
கருகி முடிந்தது நாசி
சிலை வடி மேவும் உளி ஒலி தேடி
திருகி விழுந்தன செவிகள்
ஊன் பொதி சோற்றின் தேன் சுவை கருதி
ஒட்டி உலர்ந்தது நாவும்

புலிக் கொடி பொறித்த சோழ மாந்தர்கள்
எலிக் கறி பொறிப்பதுவோ
காற்றை குடிக்கும் தாவரமாகி
காலம் கழிப்பதுவோ
மண்டை ஓடுகள் மண்டிய நாட்டை
மன்னன் ஆளுவதோ
மன்னன் ஆளுவதோ...

தாய் தின்ற மண்ணே
தாய் தின்ற மண்ணே

நொறுங்கும் உடல்கள்
பிதுங்கும் உயிர்கள்
அழுகும் நாடு
அழுகின்ற அரசன்
பழம் தின்னும் கிளியோ பிணம் தின்னும் கழுகோ
தூதோ முன் வினை தீதோ
களங்களும் அதிர களிறுகள் பிளிற
சோழம் அழைத்து போவாயோ
தங்கமே என்னை தாய் மண்ணில் சேர்த்தால்
புரவிகள் போலே புரண்டிருப்போம்
ஆயிரம் ஆண்டுகள் சேர்ந்த கண்ணீரை
அருவிகள் போலே அழுதிருப்போம்
அதுவரை அதுவரை...

தமிழர் காணும் துயரம் கண்டு
தலையை சுற்றும் கோளே.. அழாதே
என்றோ ஒரு நாள் விடியும் என்றே
இரவை சுமக்கும் நாளே.. அழாதே
நூற்றாண்டுகளின் துருவை தாங்கி
உறையில் தூங்கும் வாளே.. அழாதே
எந்தன் கண்ணின் கண்ணீர் கழுவ
என்னோடழும் யாழே.. அழாதே

நெல்லாடிய நிலமெங்கே
சொல்லாடிய அவையெங்கே
வில்லாடிய களமெங்கே
கல்லாடிய சிலையெங்கே
தாய் தின்ற மண்ணே
இது பிள்ளையின் கதறல்
ஒரு பேரரசன் புலம்பல்

Tuesday, January 19, 2010

உன் மேல ஆசதான்.....


திரைப்படம் : ஆயிரத்தில் ஒருவன்
வெளியான நாள் : 14.01.2010

தயாரிப்பு : R.ரவீந்திரன்
இயக்கம் : செல்வராகவன்

இசை : G.V.பிரகாஷ் குமார்
பின்னணி : தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ்,ஆண்ட்ரியா

பாடல் வரிகள்

உன்மேல ஆசதான்...
ஆனது ஆகட்டும் சே டு மீ பேபி (say to me baby)
போனது போகட்டும் டூ ட்டூ மீ பேபி (do to me baby)
இது
கனவு தேசம்தான்
நினைத்ததை முடிப்பவ ஒன் மோர் டைம் யே (one more time yeah)
கிடைத்ததை எடுப்பவ டூ ட்டூ மீ பேபி (do to me baby)

காத்தாடி போல நெஞ்சு கூத்தாடுதே
கண்ணாடி பொம்மை ரெண்டு சேர்ந்தாடுதே

உன்மேல
ஆசதான்...
ஆனது ஆகட்டும் சே டு மீ பேபி (say to me baby)
போனது
போகட்டும் டூ ட்டூ மீ பேபி (do to me baby)
இது
கனவு தேசம்தான்...
நினைத்ததை
முடிப்பவ ஒன் மோர் டைம் யே (one more time yeah)
கிடைத்ததை
எடுப்பவ டூ ட்டூ மீ பேபி (do to me baby)

என் எதிரே ரெண்டு பப்பா கை வச்சா என்ன தப்பா ?
தினுசான கேள்வி தான்பா துடிப்பான காலம் இப்ப
கடலேரும் கப்பலப்பா கரைதட்டி நிக்குதப்பா
பெண் தொட்டா மலையும் சாயும் நடுசாமம் நிலவு காயும்
தேசம் நானும் தேகம் டே குறித்து ஊசி போலே தொலைவீர்பா

மனிதன் ஊட்ட வீடடா
வாசல் இங்கு நூறடா
உடலை விட்டு நீங்கடா
உன்னை உற்று பாரடா

என் ஆச ரோசா...
படித்து
முடிக்கலாம் ஒரு வாட்டி வா..
நான்
தானே ராசா...
ஒத்துகிட்டு
தொட்டுக்கலாம் தீ மூட்டி

ஈசன் ஆளும் சம்பல் மேல் உருண்டு
ஈசல் போல அலை வீர்பா..

காத்தாடி
போல நெஞ்சு கூத்தாடுதே
கண்ணாடி பொம்மை ரெண்டு சேர்ந்தாடுதே

ஓஹ்ஹ பாய் பாய் பாய்

Monday, January 11, 2010


திரைப்படம் : வேட்டைக்காரன்
வெளியான நாள் : 18.12.2009
தயாரிப்பு : A.V.M (M. பாலசுப்ரமணியன் & B. குருநாத் மெய்யப்பன்)
இயக்கம்
: பாபு சிவன்
இசை : விஜய் ஆண்டனி
பின்னணி : அனந்து, மகேஷ் விநாயக்ராம்

பாடல் வரிகள்


புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது
கொடி பறக்குது கொடி பறக்குது வேட்டைக்காரன் வர்றத பாத்து
கொல நடுங்குது கொல நடுங்குது துடி துடிக்குது துடி துடிக்குது
நிலம் விலகுது நிலம் விலகுது வேட்டைக்காரன் வர்றத பாத்து

பட்டாக்கத்தி
பளபளக்க.., பட்டி தொட்டி கலகலக்க
பறந்து வரான் வேட்டைக்காரன் பாமரனின் கூட்டுக்காரன்
நிக்காம ஓடு. ஓடு.. ஓடு... ஓடு...
ஓடு
... ஓடு... ஓடு... ஓடு...
ஓடு
... ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு...
வரான்
பாரு வேட்டைக்காரன்..

புலி உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது
கொடி பறக்குது கொடி பறக்குது வேட்டைக்காரன் வர்றத பாத்து
கொல நடுங்குது கொல நடுங்குது துடி துடிக்குது துடி துடிக்குது
நிலம் விலகுது நிலம் விலகுது வேட்டைக்காரன் வர்றத பாத்து

யார்
இவன் யார் இவன் யார் இவன்
அந்த ஐய்யனாரு ஆயுதம் போல் கூர் இவன்
இருபது நகங்களும் கழுகுடா.,
இவன்
இருப்பதே உலகுக்கு அழகுடா..
அடங்க
மறுத்தவனை அழிச்சுடுவான்
இவன் அமிலத்தை மொண்டு தினம் குளிச்சுடுவான்
இவனோட நியாயம் தனி நியாயம்
அட இவனால அடங்கும் அநியாயம்

போடு
அடிய போடு
போட்டு அடிய போடு
டங்கறு டங்கறு டங்கறு டங்கறு டங்கறு டங்கறுனா
போடு டங்கறு டங்கறு டங்கறு டங்கறு டங்கறு டங்கறுனா

புலி
உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது
கொடி பறக்குது கொடி பறக்குது வேட்டைக்காரன் வர்றத பாத்து
கொல நடுங்குது கொல நடுங்குது துடி துடிக்குது துடி துடிக்குது
நிலம் விலகுது நிலம் விலகுது வேட்டைக்காரன் வர்றத பாத்து

அச
தோமா சக் கமைய
தம சோம ஜோதி கமைய
வித் ஜோம அமிர்தம் கமய
ஓம் சாந்தி சாந்திகி

யார்
இவன் யார் இவன் யார் இவன்
ஒத்தையாக நடந்து வரும் ஊர் இவன்
சினத்துக்கு பிறந்திட்ட சிவனடா
அட இவனுக்கு இணை தான் எவனடா
இவனுக்கு இல்லடா கடிவாளம்
இவன் வரலாற்ற மாத்திடும் வரும் காலம்
திரும்பும் திசை எல்லாம் இவன் இருப்பான்
இவன் திமிருக்கு முன்னால எவன் இருப்பான்

போடு
அடிய போடு
போட்டு அடிய போடு
டங்கறு டங்கறு டங்கறு டங்கறு டங்கறு டங்கறுனா
போடு டங்கறு டங்கறு டங்கறு டங்கறு டங்கறு டங்கறுனா

புலி
உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது
கொடி பறக்குது கொடி பறக்குது வேட்டைக்காரன் வர்றத பாத்து
கொல நடுங்குது கொல நடுங்குது துடி துடிக்குது துடி துடிக்குது
நிலம் விலகுது நிலம் விலகுது வேட்டைக்காரன் வர்றத பாத்து

பட்டாக்கத்தி
பளபளக்க.., பட்டி தொட்டி கலகலக்க பறந்து வரான் வேட்டைக்காரன் பாமரனின் கூட்டுக்காரன்
நிக்காம ஓடு. ஓடு.. ஓடு... ஓடு....
ஓடு
... ஓடு... ஓடு... ஓடு...
ஓடு
... ஓடு... ஓடு... ஓடு... ஓடு... ஓடு...ஓடு...
வரான்
பாரு வேட்டைக்காரன்..

புலி
உறுமுது புலி உறுமுது இடி இடிக்குது இடி இடிக்குது
கொடி பறக்குது கொடி பறக்குது வேட்டைக்காரன் வர்றத பாத்து
கொல நடுங்குது கொல நடுங்குது துடி துடிக்குது துடி துடிக்குது
நிலம் விலகுது நிலம் விலகுது வேட்டைக்காரன் வர்றத பாத்து


Friday, January 8, 2010



திரைப்படம் : நினைத்தாலே இனிக்கும்
வெளியான நாள் : 14-04-1979
தயாரிப்பு : R. வெங்கட்ராமன்
இயக்கம் : K. பாலச்சந்தர்
எடிட்டர் : N.R.கிட்டு
கலை : சலம்
இசை : M.S.விஸ்வநாதன்
பாடல் : கண்ணதாசன்
பின்னணி : S.P.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம்.

பாடல் வரிகள் :

பாரதி கண்ணம்மா...
நீயடி சின்னம்மா
கேளடி பொன்னம்மா
அதிசய மலர் முகம்
தினசரி பல ரகம்...(2)
ஆயினும் என்னம்மா
தேன்மொழி சொல்லம்மா
பாரதி கண்ணம்மா
நீயடி சின்னம்மா

பாரதி கண்ணையா...
நீயே சின்னய்யா
கேளிதை பொன்னய்யா
அதிசய மலர் முகம்...
தினசரி பல ரகம் (2)
ஆயினும் என்னய்யா..
ஆயிரம் சொல்லய்யா (2)

ஒரே ராகங்களில் பாடும் விதம்
மாறும் தினம் மாறும்(2)
மேகங்களில் காணும் படம்
மாறும் தினம் மாறும்
அழகிய கலை அது
இவளது நிலை இது
ஆயினும் என்னய்யா
ஆயிரம் சொல்லய்யா (2)

நிலா காலங்களில் சோலைகளில்
ஆடும் சுகம் கோடி (2)
தோகையிடம் காணும் சுகம்
இன்னும் பல கோடி
பலவகை நறுமணம்...
தருவது திருமணம்
ஆயினும் என்னம்மா
தேன் மொழி சொல்லம்மா
பாரதி கண்ணம்மா
நீயடி சின்னம்மா

பாரதி கண்ணையா
நீயே சின்னய்யா
கேளிதை பொன்னய்யா..
அதிசய மலர் முகம்...
தினசரி பல ரகம்
ஆயினும் என்னம்மா
தேன் மொழி சொல்லம்மா (2)

விழா காலங்களில் கோவில் சிலை
பாடும் உரை பாடும் (2)
காலை வரை காமன் கணை
பாயும் வரை பாயும்
சுகம் ஒரு புறம் வரும்...
இடை இடை பயம் வரும்
ஆயினும் என்னய்யா
ஆயிரம் சொல்லய்யா (2)

அலை மோதும்படி ஓடும் நதி
நெஞ்சம் இள நெஞ்சம் (2)
ஆசை வலை தேடும் சுகம்
மஞ்சம் மலர் மஞ்சம்
முதல் முதல் பயம் வரும்
வர வர சுகம் வரும்
ஆயினும் என்னம்மா
தேன் மொழி சொல்லம்மா
பாரதி கண்ணம்மா
நீயடி சின்னம்மா

பாரதி கண்ணையா
நீயே சின்னய்யா
கேளிதை பொன்னய்யா..
அதிசய மலர் முகம்
தினசரி பல ரகம்
அதிசய மலர் முகம்
தினசரி பல ரகம்