Friday, January 8, 2010



திரைப்படம் : நினைத்தாலே இனிக்கும்
வெளியான நாள் : 14-04-1979
தயாரிப்பு : R. வெங்கட்ராமன்
இயக்கம் : K. பாலச்சந்தர்
எடிட்டர் : N.R.கிட்டு
கலை : சலம்
இசை : M.S.விஸ்வநாதன்
பாடல் : கண்ணதாசன்
பின்னணி : S.P.பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம்.

பாடல் வரிகள் :

பாரதி கண்ணம்மா...
நீயடி சின்னம்மா
கேளடி பொன்னம்மா
அதிசய மலர் முகம்
தினசரி பல ரகம்...(2)
ஆயினும் என்னம்மா
தேன்மொழி சொல்லம்மா
பாரதி கண்ணம்மா
நீயடி சின்னம்மா

பாரதி கண்ணையா...
நீயே சின்னய்யா
கேளிதை பொன்னய்யா
அதிசய மலர் முகம்...
தினசரி பல ரகம் (2)
ஆயினும் என்னய்யா..
ஆயிரம் சொல்லய்யா (2)

ஒரே ராகங்களில் பாடும் விதம்
மாறும் தினம் மாறும்(2)
மேகங்களில் காணும் படம்
மாறும் தினம் மாறும்
அழகிய கலை அது
இவளது நிலை இது
ஆயினும் என்னய்யா
ஆயிரம் சொல்லய்யா (2)

நிலா காலங்களில் சோலைகளில்
ஆடும் சுகம் கோடி (2)
தோகையிடம் காணும் சுகம்
இன்னும் பல கோடி
பலவகை நறுமணம்...
தருவது திருமணம்
ஆயினும் என்னம்மா
தேன் மொழி சொல்லம்மா
பாரதி கண்ணம்மா
நீயடி சின்னம்மா

பாரதி கண்ணையா
நீயே சின்னய்யா
கேளிதை பொன்னய்யா..
அதிசய மலர் முகம்...
தினசரி பல ரகம்
ஆயினும் என்னம்மா
தேன் மொழி சொல்லம்மா (2)

விழா காலங்களில் கோவில் சிலை
பாடும் உரை பாடும் (2)
காலை வரை காமன் கணை
பாயும் வரை பாயும்
சுகம் ஒரு புறம் வரும்...
இடை இடை பயம் வரும்
ஆயினும் என்னய்யா
ஆயிரம் சொல்லய்யா (2)

அலை மோதும்படி ஓடும் நதி
நெஞ்சம் இள நெஞ்சம் (2)
ஆசை வலை தேடும் சுகம்
மஞ்சம் மலர் மஞ்சம்
முதல் முதல் பயம் வரும்
வர வர சுகம் வரும்
ஆயினும் என்னம்மா
தேன் மொழி சொல்லம்மா
பாரதி கண்ணம்மா
நீயடி சின்னம்மா

பாரதி கண்ணையா
நீயே சின்னய்யா
கேளிதை பொன்னய்யா..
அதிசய மலர் முகம்
தினசரி பல ரகம்
அதிசய மலர் முகம்
தினசரி பல ரகம்

0 comments:

Post a Comment